சைக்கிள் கேப்பில் பாஜகவை கலாய்த்த திமுக எம்எல்ஏ!
DMK mla Criticism BJP loss of WhatsApp functionality
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அன்றாட வாழ்வில் அடிப்படை தேவையாகவே வாட்ஸ் அப் மாறி உள்ளது. அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும் தங்களின் தேவைக்காக வாட்ஸப் குழுக்களை உருவாக்கி உபயோகித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி நேரம் வாட்ஸ் அப் சேவை உலகம் முழுவதும் பாதிப்படைந்தது.
இதன் காரணமாக இணையதள வாசிகள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா வாட்ஸ் அப் இல்லை என்றால் பாஜகவால் செயல்பட முடியாது என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது பதிவில் கூறியதாவது "கவலை வேண்டாம் வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒன்றிய அரசு இயங்க முடியாது... அவர்கள் எப்படியாவது சரி செய்துவிடுவார்கள்" என பாஜகவை சைக்கிள் கேப்பில் கலாய்த்துள்ளார். தமிழகத்தில் ஒரு சில கட்சிகளும் இதே போன்று வாட்ஸ் அப் செயலி மூலம் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
English Summary
DMK mla Criticism BJP loss of WhatsApp functionality