மிக விரைவில்! X-ல் வீடியோ, ஆடியோ கால் வசதி அறிமுகம்! - எலான் மஸ்க் அறிவிப்பு!
Elon Musk announced video audio call on X
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் அதனை எக்ஸ் சமூக வலைதளம் என பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதியை கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எஸ் சமூக வலைதள பயனாளர்கள் மொபைல் நம்பர் இல்லாமலேயே எந்தவொரு நபருடனும் பேச முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப், டெலிகாரம், போன்ற செயலிகளில் இந்த வசதி இருக்கும் நிலையில், இதை ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "விரைவில் எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் வருகிறது. ஐபோன்கள், ஆண்டிராய்டு, ஆப்பிள் கணினி, விண்டோஸ் கம்பியூட்டர் என அனைத்திலும் இது வேலை செய்யும்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்ய மொபைல் எண் தேவையில்லை. எக்ஸ் தளத்தில் ஏற்கனவே உலகளவில் இருக்கும் முக்கிய நபர்களது உள்ளனர். எனவே, இந்த கால் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. இது எக்ஸ் தளத்தில் புரட்சிகரமானதாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Elon Musk announced video audio call on X