குருவிக்கு Good Bye.! ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்.!! - Seithipunal
Seithipunal


உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் பல ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கியதோடு பல இந்திய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார். உலகம் முழுவதும் பல அலுவலகங்களை மூடிய எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பையும் நீக்கினார்.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்ததோடு இனி ப்ளூ டிக் வைத்திருக்க சந்தா செலுத்த வேண்டும் என அறிவித்தார். 

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை 'X' என மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து அதற்காக X.Com என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை நீக்கப்பட்ட அதற்கு பதிலாக 'X' என்ற லோகோ வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ட்விட்டர் தளம் மாற்றப்பட்டு எக்ஸ் தளமாக மாறும். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ யாக்கரினா கூறுகையில் "எக்ஸ் நிறுவனம்தான் இனி எதிர்காலம். எக்ஸ் நிறுவனம் வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் எல்லாம் சேர்ந்து ஒரே செயலில் இருக்கும் வகையில் ஒரு பிராண்டாக இருக்கும். எல்லா சேவைகளை அளிக்கும் இடமாக எக்ஸ் இது இருக்கும். AI மூலம் செயல்படும் எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk changed Twitter logo to X


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->