நான் அவன் இல்லை! மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடுப்பாகி ட்விட் போட்ட நபர்!
Mumbai traffic police sent fine bill to wrong person his tweet going to viral
இருசக்கர வாகனத்திற்கு பதில் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்த மும்பை போலீஸ்!
மும்பையைச் சேர்ந்த சுசித் ஷா என்பவருக்கு தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறியதாக அபராத செலான் கடந்த சில மாதங்களாக அவரது முகவரிக்கு வந்துள்ளது. ஆனால் அவர் இது போன்ற விதிமுறைகளில் ஈடுபடவில்லை. அவருக்கு வந்த செலானை சோதித்தபோது அவருடைய கார் பதிவு எண்ணும் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணூம் சிறிய மாற்றத்துடன் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. அவருடைய கார் பதிவு எண் MH02FJ0759 ஆகும்.
இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வாறு எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடர்ந்து அவர் முகவரிக்கு அபராத செலான் வந்துள்ளது. இதனால் கடுப்பான சுசித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை போக்குவரத்துக் காவல் பக்கத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டு உள்ளார்.
அந்தப் பதிவில் போட்டோ ஒன்றை பகிர்ந்து இந்த நபர் தான் தொடர்ந்து டிராபிக் விதியை மீறி வருகிறார். அவருடைய டூவீலர் நம்பர் பிளேட்டில் உள்ள MH02EJ0759 என்பதற்கு பதில் MH02FJ0759 என மாறி உள்ளது. இது என்னுடைய கார் நம்பர்.
போக்குவரத்து விதி மீது அந்த நபருக்கு பதில் எனக்குத்தான் மாதமாதம் தவறாமல் மும்பை போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபதார செலான் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக புகார் செய்து நொந்து போய்விட்டேன் தயவு செய்து உதவுங்கள்" என பதிவு போட்டு இருந்தார்.
இவருடைய பதிவு வைரலாகவே மும்பை போக்குவரத்து போலீசார் "உங்கள் குறைகளை மும்பை போக்குவரத்து செய்தியில் பதிவிடுங்கள்" என பதிலளித்திருந்தனர். இதற்கு பதில் அளித்த சுசித் ஷா "ஏற்கனவே மூன்று முறை மேல் புகார் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை" என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் செலான் வரும் பொழுது போட்டோவும் இணைக்கப்படுகிறது. அதை வைத்து எம்பரிவான் இணையதளத்தில் சோதனை செய்தேன். அப்பொழுது இந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்தேன். அதனை வைத்து MH02EJ வரிசையில் தேடிய பொழுது இந்த விதி மீறியவரை கண்டுபிடித்தேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
Mumbai traffic police sent fine bill to wrong person his tweet going to viral