சச்சின் உடன் இணைந்து டென்னிஸ் விளையாடிய மகேந்திர சிங் டோனி! - Seithipunal
Seithipunal


சச்சின் மற்றும் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். அவருக்கு கால்பந்தில் ஈடுபாடு உள்ளது என அவரின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் தற்பொழுது மற்ற விளையாட்டுகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

கடந்த வாரம் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுடன் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்று தோனி விளையாடி உள்ளார். அதனை தனது அதிகாரக பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கபில்தேவ் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் தோனி டென்னிஸ் விளையாடி உள்ளார். இருவரும் டென்னிஸ் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மஞ்சள் சட்டையுடன் தோனியும் நீல சட்டையுடன் சச்சினும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சச்சின் மற்றும் தோனி ரசிகர்கள் இந்த புகைப்படங்களை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin and dhoni together playing tennis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->