ராசிக்கு சோதிடம் பார்த்தால் பலிக்காது. பின் எதை வைத்துப் பார்த்தால் துல்லியமாக பலனை அறிய முடியும்….?
ராசிக்கு சோதிடம் பார்த்தால் பலிக்காது. பின் எதை வைத்துப் பார்த்தால் துல்லியமாக பலனை அறிய முடியும்….?
ராசிக்கு சோதிடம் பார்த்தால் பலிக்காது. பின் எதை வைத்துப் பார்த்தால் துல்லியமாக பலனை அறிய முடியும்….?
குருப் பெயர்ச்சி வரப் போகிறது. இன்னென்ன ராசிக்காரர்களுக்கு மகா யோகம், இன்னென்ன ராசிகளுக்கு சரியில்லை, என்று பொதுவான பலன்களும் சொல்வார்கள். இதைக் கண்டு பலர் மனம் கலங்குவார்கள். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ? என்றெல்லாம் பதறுவார்கள்.
பதறாதீர்கள். உண்மையில், ராசிக்கு சொல்லும் பலன்கள் பலிப்பதில்லை. சோதிடக் கலையில், ராசி என்பது உடல். ஆனால், அதன் உயிர் லக்கினம் தான். உங்களுடைய ஜாதகத்தை எடுத்துப் பாருங்கள். அதில், “ல” என்று ஏதாவது ராசிக் கட்டத்தின் கீழே, குறுக்கு கோடு போட்டிருப்பார்கள். அது தான் உங்கள் லக்கினம்.
அது தான் சோதிடத்தின் உயிர். உயிருள்ள உடலைத் தான் ஆய்வு செய்ய வேண்டும், உயிர் அற்ற வெறும் உடலினால், எந்தப் பலனும் இல்லை.
அந்த உயிரை வைத்து தான், ராசி என்கிற உடலை ஆய்வு செய்ய வேண்டுமே ஒழிய, வெறும் ராசியை மட்டும் பார்த்தால், அது பொதுவான பலனாகத் தான் இருக்கும்.
அதே போல், ஒவ்வொரு லக்கினத்திற்கும், உள்ள குணாதிசயங்கள், 98 சதவீதம், பொருத்தமானதாக இருக்கும். அதை வைத்து, அந்த ஜாதகரின் லக்கினத்தின் படி, அவரது குணாதிசயங்களைக் கண்டு கொள்ளலாம். லக்கினத்தைக் கொண்டு தான், உங்கள் தசா புத்தி கணக்கிடப்படுகிறது.
எனவே, இனி மேல் உங்கள் லக்கினத்திற்கு மட்டும், சோதிடம் பாருங்கள். அதில் தான் உண்மையான பலனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.