'சப்பை மூக்கு சைனாக்காரன்' சிலப்பதிகாரத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதி அதிகமாகி கொண்டிருக்க, இணைய வாசிகள் பலரும், கொரோனவை கான்செப்ட் ஆக்கி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸாப்பில், சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் கொரோனா குறித்த குறிப்புகள் இருப்பதாக சில பதிவுகள் வைரலாகின்றன. 

இணையத்தில் வைரலாகும், அந்த பதிவு பின்வருமாறு:-

சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி..

"தட்டையான் மூக்குடையான் 
வெட்டுவான் விடமாவான் 
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க 
மற்றவன் கொற்றவன் 
வித்துடல் ஆகி நிற்க 
சாசில்லை மேசில்லை 
கோரானான் வை ராசா 
என் செய்வாய் என் ராசா?"

அர்த்தம்:

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள்.  அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்தார் போகர்.இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.

"சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்"

இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்று சேர்ந்து தாக்கியது போல, கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு (பித்தம்) அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு (இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) (சிதை கொள்வாள்) அதாவது இறப்பார்கள். 

உண்மையான தமிழனா இருந்தா சேர் பண்ணுங்க.! " என்பதே அந்த பதிவாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whatsapp viral post about corona virus


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->