அமர்நாத் : 5000 ஆண்டு பழமையான பனி லிங்கம் - ஒரே நாளில் தரிசித்த 11, 000 யாத்திரீகர்கள்..!! - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று (ஜூலை 19) ஒரே நாளில் சுமார் 11 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குகைக் கோவில் தான் அமர்நாத் குகைக் கோவில். சுமார் 5000 ஆண்டு காலப் பழைமையான இந்த கோவிலில் பனிக் கட்டியால் ஆன சிவ லிங்கம்  பனி லிங்கமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

இந்தப் பனி லிங்கம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலங்களில் உருகி, பின்னர் மீண்டும் லிங்கமாக உருப் பெறுவதாகக் கூறப்படுகிறது. இங்கு தான் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியங்களை தெரிவித்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள இந்த கோவிலுக்கு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் போக முடியாது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 45 நாட்களுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கும். 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கியது. 21 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை 3.75 லட்சம் யாத்திரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதிலும் நேற்று ஒரே நாளில் சுமார் 11 ஆயிரம் யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளார்கள். 

குடைவரைக் கோவிலான இந்த அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பது இந்துக்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 Thousand Devotees Made Dharshan in 5000 Year Old Amarnath Cave Temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->