ஆடி இரண்டாவது வெள்ளிக் கிழமை .. இன்று அம்மனின் எந்த ரூபத்தை, எப்போது வழிபட வேண்டும் தெரியுமா..?! - Seithipunal
Seithipunal


தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் விசேஷமான மாதமாகும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் 5 வெள்ளிக் கிழமைகள் வருகின்றன. அதன்படி இன்று (ஜூலை 26) 2வது ஆடி வெள்ளிக் கிழமையாகும். 

அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளிக் கிழமையில் இன்று முருகப் பெருமானுக்கு உகந்த தேய்பிறை சஷ்டியும் சேர்ந்தே வந்துள்ளது. எனவே இந்நாளில் அம்மனை வழிபடுவதோடு, முருகப் பெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பான நற்பலன்களைக் கொடுக்கும். 

இன்று அம்மனை வழிபட உகந்த நேரம் :

இன்று அதிகாலையிலேயே நீராடி, விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு 8 மணி முதல் 9 மணி வரை அம்மனின் ரூபங்களில் ஒன்றான காமாட்சி அம்மனை வழிபட வேண்டும். இதற்கு காமாட்சி அம்மன் படத்தை மலர்களால் அலங்கரித்து, குங்குமம் மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். 

பின்னர் சர்க்கரைப் பொங்கல் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பை அம்மனுக்கு நிவேதனமாகப் படைத்து, பிறகு நீங்களும் அந்த பிரசாதத்தை உண்டு உங்கள் விரதத்தை முடிக்கலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் விரதம் இருக்கலாம். அல்லது பாலும், பழமும் மட்டும் சாப்பிடலாம். 

நம்மை சூழ்ந்துள்ள கஷ்டம் எனும் இருளை நீக்கக் கூடியவள் அம்மன் என்பதால், மாலை நேரத்தில் அம்மனை வழிபடுவதே மிகவும் சிறந்த பலனைத் தரும். மேலும் தேய்பிறை சஷ்டியுடன் வரும் ஆடி வெள்ளிக் கிழமையில் காமாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi 2nd Friday Worship Time And Method


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->