ஆடி அமாவாசை : ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு.!
Aadi Amavasai Public worship at Rameswaram
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் காசி, ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.
இந்த நிலையில் இந்தாண்டிற்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். வடமாநிலங்களான குஜராத், மும்பை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே ராமேசுவரம் வந்து தங்கி இருந்தனர்.
புரோகிதர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரார்த்தனைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. இருந்த போதிலும் மழையை பொருட்படுத்தாமல் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஆடி அமாவாசையின் போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
English Summary
Aadi Amavasai Public worship at Rameswaram