ஆடி அமாவாசை : தாமிபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்.!
Adi Amavasai Tamibarani river darpanam ancestors
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் அதிகமாக திரண்டனர்.
தாமிபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அங்கு பொது மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அங்கு பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
English Summary
Adi Amavasai Tamibarani river darpanam ancestors