தினம் ஒரு திருத்தலம்... மகன்கள்... பேரன்களுடன் காட்சிதரும் விநாயகர்.!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி என்னும் ஊரில் அருள்மிகு அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் என்ன :

கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது 3 டன் எடையிலான தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

பொதுவாக அம்பிகை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், இத்திருக்கோயிலில் உண்மையான அம்மன் சிலை இல்லை. விஷயந்திரம் என்ற யந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த யந்திரத்தை ஒரு மார்பிள் பிளேட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரித்துள்ளனர்.

இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனை ஸ்ரீயந்திரம் என்றும் சொல்கின்றனர்.

வேறென்ன சிறப்பு :

அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ளமான இடத்தில் நாகேஸ்வரர், அனுமன், நாகராஜர் சிலைகள் உள்ளன.

அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயிலில் விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

இத்திருக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

திருவிழாக்கள் :

அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயிலில் நவராத்திரியன்று சிறப்பான திருவிழாக்கள் கொண்டாப்படுகின்றது.

பிரார்த்தனைகள் :

பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், காலமெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருஷ்ணனைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்கள் :

இத்திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambe ma temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->