ஆனித் தேரோட்டம் - பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் நடராஜ பெருமான்.!
ani month chariat in chithambaram nadarajar temple
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட தேரில் நடராஜ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். நான்கு மாட வீதிகளிலும் சுவாமிகள் வீதி உலா வருகின்றனர்.
இந்தத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், நாளை அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
அதன் பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும். சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
English Summary
ani month chariat in chithambaram nadarajar temple