''ஆன்மீக ரகசியங்கள்'' மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுவதற்கான பயன் என்னவென்று தெரியுமா?
Anmika rakaciyankal in tamil
பொதுவாக வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும்பொழுது விளக்கு ஏற்றுவது வழக்கம். சூரியன் மறையும் மாலை நேரத்தில் வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கு மிகவும் சிறப்பு மிக்கது.
* சூரியன் மறைவதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில், துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் லட்சுமி தேவி நமது வீட்டிற்கு வருவார்கள் என அர்த்தம்.
* வீட்டில் இருக்கக்கூடிய விளக்கு தீபலட்சுமி என அழைக்கப்படும். வீட்டில் யார் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான பணக்காரர்கள்.
* பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில நேரங்கள் உள்ளது. அந்த நேரங்களில் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு நன்மை. அதாவது பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் விளக்கேற்றுவது நல்லது.
* மாலை பிரதோஷ நேரத்தில் 4.30 மணி அளவில் 6.30 மணிக்குள் விளக்கேற்றுவதும் நல்லது. இப்படி இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
* ஜோதிடப்படி ஒவ்வொரு எண்ணெய் தீபத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் முகத்திலும் பேச்சிலும் செயலிலும் வசீகரம் அதிகரிக்கும்.
* நல்லெண்ணையில் விளக்கேற்றினால், ஆரோக்கியம் அதிகரிக்கும். நெய் விளக்கு ஏற்றினாள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வீட்டில் செல்வம் பெருகும்.
* விளக்கெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் நமது மரியாதை, மதிப்பு கூடும். வேப்ப எண்ணையில் விளக்கேற்றினால் அமைதி நிலவும்.
* இலுப்பை எண்ணெயில் வீட்டில் விளக்கேற்ற கூடாது. ஏற்றி வைக்கும் விளக்கு தானாக அமையக்கூடாது. அப்படியானால் வீட்டில் நல்லது நடக்காது. எனவே விளக்கேற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
English Summary
Anmika rakaciyankal in tamil