''ஆன்மீக ரகசியங்கள்'': பிரச்சனைகளை தீர்க்கும் ஏலக்காய் பூஜை! - Seithipunal
Seithipunal


ஒரு மனிதனுக்கு சாதாரணமாக பல்வேறு வழிகளில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதிலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை சச்சரவாகவே இருக்கும். குறிப்பாக கடன் தொல்லை இருந்தால் அந்த வீட்டில் சந்தோஷம் என்பதே இருக்காது. 

இதற்கான தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை ஒரு கோவிலுக்கு சென்று வந்ததும் காணாமல் போய்விட்டது என தெரிவிப்பார்கள். 

மனநிம்மதி அடைய பிரச்சனைகள் எளிதில் தீர்க்க தினமும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. உங்களது வீட்டில் தினம் தோறும் இரண்டு ஏலக்காயை விநாயகப் பெருமானிடம் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பிரச்சனைகளும் வந்த வழி தெரியாமல் போய்விடும். 

இதனை தன்னம்பிக்கையோடு செய்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு பரிகாரம் செய்ய வேண்டும். 

திங்கட்கிழமை பூஜை செய்பவர்கள் சைவம் சாப்பிடக்கூடாது. மேலும் வீட்டில் விநாயகர் படத்தை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்வது நல்லது. 

கணபதி முன்பு தீபம் ஏற்றி வைத்து கைப்பிடி அளவு பச்சரிசி நாட்டு சக்கரை இரண்டு ஏலக்காய் போட்டு நன்றாக கலந்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். 

வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வழிபட கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் தினந்தோறும் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை படையலாக படைத்த பின் தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, பேரிச்சம்பழம் போன்ற பொருட்களை பயன்படுத்துவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal yelakkai Pooja 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->