தினம் ஒரு திருத்தலம்... பச்சைக்கல் மகாமேரு அம்பிகை .. 18 சித்தர்களின் சிலை.! - Seithipunal
Seithipunal


அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்:

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள மாடம்பாக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இந்த கோயிலில் ஸ்ரீ சக்ரநாயகி லலிதா பரமேஸ்வரி அம்பாள் பிரதானமாக இருக்கிறாள். எனவே இந்த கோயிலை லலிதா பரமேஸ்வரி கோயில் என்று அழைக்கின்றனர்.

இங்கு ஒரே பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சன்னிதி உள்ளது. இக்கோயிலில் பசுமடம் உள்ளது.

இங்கு பாம்பாட்டி சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, புலிப்பாணி, காகபுஜண்டர், போகர் ஆகிய பதினெட்டு சித்தர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். எல்லா சித்தர்களுக்கும் அற்புதமான சிலை உண்டு.

18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி, நவகிரகங்களின் சக்திகளையும், செயல்பாடுகளையும் ஏற்று அருள்பாலித்து வருவதால் இவ்வாறு செய்துள்ளனர்.

வேறென்ன சிறப்பு?

சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிருந்தா சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளது.

திருவிழா காலங்களில் பெண்களே நேரடியாக பூஜையும் செய்யலாம்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துவது சிறப்பான ஒன்று.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

சித்தர்கள் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arulmigu Lalitha paramesvari temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->