கடன் தொல்லைகளை குறைக்கும்.. ஆவணி வளர்பிறை சஷ்டி.. முருகப்பெருமானை வணங்குவோம்..! - Seithipunal
Seithipunal


ஆவணி மாத சஷ்டி...!!

ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம். முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

அந்த வகையில் நாளை ஆவணி வளர்பிறை சஷ்டி வருகிறது. இத்தினத்தன்று சஷ்டி விரதத்தை எளிமையாக எப்படி மேற்கொள்ளலாம்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.

விரதம் இருக்கும் முறை :

ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.

முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம். இவ்விரத்தத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விளக்கை மலை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

ஆவணி மாத சஷ்டி அன்று மாலையில் முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நெய்வேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்க, வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். கடன் தொல்லைகள் குறையும் என்பது உறுதி.

உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜையறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நெய்வேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

விரத பலன்கள் :

இந்த முறையில் ஆவணி மாத சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

பொருளாதாரத்தில் உள்ள கஷ்டநிலை நீங்கும்.

தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avani Month sashtti viratham In Special 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->