இறந்தவர்கள் கனவில் வந்தால் இதெல்லாம் நடக்குமா? - Seithipunal
Seithipunal


துக்கத்தில் பெருமாலனவர்களுக்கு கனவுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே. கனவில் காணும் காட்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரம் பலன்களை கூறுகிறது. தற்போது கனவில் இறந்தவர்களை கண்டால் என்னென்ன பலன் கிடைக்கும் என பார்போம்.

நல்ல பலன்கள்:

இறந்தவர்கள் கனவில் வந்து உங்களை ஆசிர்வதித்தால் நீண்ட காலம் வாழ்வீர்கள் மேலும் வாழ்வில் எல்லா வித நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறந்தவர்கள் உங்களோடு சாப்பிடுவது போன்று கனவு வந்தால் நற்புகழ் செல்வ செழிப்பு கிட்டும். அதே போல அவர்களுடன் பேசுவது போன்று கனவு வந்தால் உங்கள் இக்கட்டான சூழலில் உதவி வருகிறது என அர்த்தம்.

இறந்து போன தந்தை கனவில் வந்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிவு வர போகிறது என பொருள். மேலும்,  இறந்த தாய் கனவில் வந்தால் பெண் குழந்தை பிறக்க போகிறது என அர்த்தம்.

நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.  தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

தீய பலன்கள்;

இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும், இறந்த தாய் தந்தை ஒரே நேரத்தில் கனவில் வந்தால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டி காட்டுவதாக பொருள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefit of dreaming of the dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->