வாரத்தின் ஏழு நாட்களும் வீட்டில் சாம்பிராணி போட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? - Seithipunal
Seithipunal


அனைத்து மத பூஜையிலும் சாம்பிராணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தந்த நாட்களில் இறைவனுக்கு தூபம் காட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்போம்.

ஞாயிறு :

ஞாயிற்று கிழமைகளில் தூபம் காட்டினால் ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் ஆகியவை உயரும்.

திங்கள் :

அன்று திங்கள் காட்டும் போது தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி அதிகரிக்கும். அம்மாளின் அருளும் கிட்டும்.

செவ்வாய் :

செவ்வாய் கிழமைகளில் சாம்பிராணி தூபம் காட்டினால் எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை நீங்கும்.  முருகனின் அருள் கிட்டும்.

புதன் :

புதன் கிழமை அன்று சாம்பிராணி தூபம் காட்டினால் சுதர்சனின் அருள் கிட்டும். அதே போல நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, ஆகியவை கிடைக்கும்.

வியாழன் :

வியாழன்  அன்று தூபம் காட்டுவதால் சித்தர்களின் அருள் கிடைக்கும். சகல சுப பலன்கள், பெரியோர்களின் ஆசியும் கிட்டும்.

வெள்ளி:

வெள்ளிகிழமைகளில் தூபம் காட்டினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சகல செல்வங்களுக்ம் கிட்டும் என்பது நம்பிக்கை.

சனி :

சனிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காட்டினால் சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் ஆகியோரின் அருள் கிட்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits sambrani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->