வாகனப் பேரணியில் ஹெல்மட் அணியாத பாஜக எம்.பிக்கு அபராதம்.! அவரே ட்வீட் போட்டு மன்னிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகிய நிலையில் இந்த சுதந்திர தினத்தை ஓராண்டுக்கு கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதன் ஒரு படியாக அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு முன்னெடுத்து கொண்டுசெல்கிறது 

இதன்படி டெல்லி செங்கோட்டையில் இருந்து பாஜகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். இதில் பாஜகவின் எம்பி மனோஜ் திவாரி தன்னை இணைத்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியில் பங்கு பெற்ற பல முக்கியஸ்தர்களும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்கி சென்றனர். புல்லட் வண்டி ஒன்றில் பாஜக எம்பி மனோஜ் திவாரி பயணித்த நிலையில் அவர் தலைக்கவசம் அணியாமல் சென்றார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் டெல்லி போக்குவரத்து துறை போலீசார் மனோஜ் திவாரிக்கு அபராதம் விதித்துள்ளனர். இந்த வாகன உரிமையாளருக்கும் தனியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவரே தனது இணையப்பக்கத்தில் தகவலை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அபராத தொகையை நான் செலுத்தி விடுகிறேன்." என்று தெரிவித்துள்ளார் அத்துடன் மக்களுக்கு பாதுகாப்புடன் வாகனம் ஓட்டுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நீங்கள் தேவை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike Ride bjp mp did Not wear Helmet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->