சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தேர் திருவிழா.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாளை தீமிதி உற்சவம் நடைபெற உள்ளது.

இதில், அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை, காப்பு கட்டுதல், சோதனை கரகம், அலகு தரிசனம், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் பின்னர் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 

தீமிதி உற்சவத்தை அன்று பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் இருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி விடையாற்றி உற்சவமும், ஆகஸ்ட் 3-ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram keezha theru mariyamman temple ther thiruvizha 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->