பிரமோற்சவ விழா : கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.!
commencement ceremony start at sarangabani temple in kumbakonam
தமிழகத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவைத்து கும்பகோணம். இங்கு அமைந்துள்ள சாரங்கபாணி சாமி கோவில் தமிழகத்தில் உள்ள 108 வைணவ தலங்களில் மூன்றாவது தலமாக உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் பிரமாண்டமாக தொடங்கியது. இதற்கு முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள், வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழக்கத்துடன் கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆரத்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளித்து பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பத்து நாட்களும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.
English Summary
commencement ceremony start at sarangabani temple in kumbakonam