ஏக லக்ன பொருத்தம்... ஏன் பார்க்க வேண்டும்? - Seithipunal
Seithipunal


புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் இவை இரண்டையும் தரவல்லது ஏக லக்னப் பொருத்தமாகும். மேலும் 5, 9ம் இட லக்னங்களும் திருமண வாழ்க்கைக்கு முக்கியமாக கருதப்படுகிறது.

ஏக லக்னத்தில் இணைந்த இனிய இல்லற தம்பதிகள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றனர். வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகள், மனஒற்றுமை, குழந்தைகள் என சகல சம்பத்துகளும் பெறுகின்றனர். ஏக லக்னம் இருவரிடமும் ஒத்த எண்ணங்களையே தூண்டுகின்றன. இதுபோன்ற ஒத்த எண்ணங்கள் ஒன்றையொன்று வலுவூட்டிக் கொண்டு தங்களின் இலக்கை அடைகின்றன.

லக்னப் பொருத்தம் :

லக்னம் என்பது ஜாதகக் கட்டத்தில் முதல் வீடாகும். ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் உள்ளதோ அந்த ராசி மண்டலம் லக்னமாக செயல்படும்.

ராசியை விட உயர்ந்த லக்னத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஜாதகர் தன் லக்னத்திற்கு தீமை செய்யும் 4, 6, 8, 12 லக்னம் இல்லாதவரை திருமணம் செய்தால் நன்மை ஏற்படும்.

ஆணின் ஜென்ம லக்னத்திற்கு எந்த ஸ்தானத்தில் (1, 2......12) பெண்ணின் பிறப்பு லக்னமாக வருகிறதோ, அந்த ஸ்தானத்திற்கு சொல்லப்பட்ட பலன்கள், அந்தப் பெண்ணை மணம் முடித்ததிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும். இதுவே லக்னப் பொருத்தத்தின் பொதுவிதி ஆகும்.

7மிட லக்னம் :

மேஷ லக்ன ஆணிற்கு 7மிடம் துலா லக்னப் பெண்ணை இணைக்கலாம். இருவரின் லக்னாதிபதிகளாகிய செவ்வாயும், சுக்கிரனும் பகை அல்ல. எனவே, நல்ல ஒற்றுமை இருக்கும்.

ரிஷப லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு 7மிட விருச்சிக லக்ன பெண் அல்லது ஆணை திருமணம் செய்யலாம். இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கும்.

மிதுன லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு 7மிட தனுசு லக்னப் பெண் அல்லது ஆணை கண்டிப்பாக திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால் லக்னாதிபதிகள் குருவும், புதனும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள். எனவே, மிதுன லக்னத்திற்கு 7மிட தனுசு லக்னத்தை பொருத்துதல் கூடாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eka lakna poruththam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->