மகா சிவராத்திரி : ராமேசுவரம் கோவிலில் நாளை கொடியேற்றம்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். 

அதன் படி, இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த திருவிழா நாளை காலை கோவிலில் நந்தி மண்டபம் அருகே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த விழாவை முன்னிட்டு தினமும் இரவு சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், தினமும் காலை சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளித்து வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

மேலும், இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி மகா சிவராத்திரி வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flag hoisting in rameshwaram ramanatha swami temple for maha sivarathiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->