ஒரே ஒரு பாறையை குடைந்து சிவனுக்காக கட்டிய அபூர்வ கோவில் எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கோவில்கள் பல இருந்தால் கூட, எந்தக் கோவிலுக்கும் இல்லாத அளவுக்கு ஒரே ஒரு பாறையை குடைந்து வடிவமைக்கப்பட்ட குகை குகை கோவில்களில் ஒன்று கைலாசநாதர் கோவில். 

இந்தியாவின் மகாராஷ்டிராவில் எல்லோரா குகை கோவில்கள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த குகை கோவில்களில் ஒரு பகுதிதான் இந்த கைலாசநாதர் கோவில்.

இந்திய கட்டிடக்கலையின் பெருமைக்குரிய சான்றாக இருக்கும் குகை கோவில்களில் இறுதியாக வடிவமைக்கப்பட்ட கோவில் இந்த கைலாசநாதர் கோவில். கைலாச நாதர் கோவிலுக்குப் பிறகு, பாறையைக் குடைந்து எந்தக் கோவிலும் உருவாக்கப்படவில்லை என்பது இந்த கோவில் கொண்டிருக்கும் தனி சிறப்பு.

உலகெங்கிலும் உள்ள ஏராளமான வரலாற்றாசிரியர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கும் பல கட்டிடக்கலை அற்புதங்களை இந்தியா கொண்டுள்ளது. அப்படி பெருமைமிக்க அற்புதங்களில் ஒன்றுதான் மகாராஷ்டிராவின் எல்லோரா குகைகளில் அமைந்துள்ள கைலாசா கோவில். இந்த ஆலயம் முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு பாறையில் செதுக்கப்பட்டது என்பது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.

இந்தியா செழிப்பாக, வளமாக வாழ்ந்த காலங்களை வெளிப்படுத்தும் அழகான, நேர்த்தியான ஓவியங்களின் சுவடுகளின் இந்த கோவிலில் நிறைந்துள்ளன. இந்தக் கோவிலின் கட்டிடக்கலை, பல்லவ ராஜ்ஜியம் மற்றும் சாளுக்கிய ராஜ்ஜியத்தின் கட்டிடக்கலைகளின் நுட்பங்களை, பாணியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.

இது 08-ஆம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட வம்சத்தினரின் ஆட்சியின்போது கட்டப்பட்ட கோவில். இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவபெருமானுக்க்காக இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்திற்குள், பார்வையாளர்கள் ஒரு அழகான சன்னதி, மண்டபங்கள், தூண்கள், தாழ்வாரங்கள், சிற்பங்கள் மற்றும் புதைப்படிவங்களின் வரிசைகள் உள்ளன. கோவில் நுழைவாயில் அற்புதமான கல் யானைகள் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்த கைலாசநாதர் கோவில் கட்டிடக்கலையின் அதிசயத்தை பாதுகாக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக இந்த கைலாச கோவில் உள்ளது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு அடையாளமாக கம்பீரமாய்  பல நூற்றாண்டுகள் கடந்த கட்டிடக்கலையாக இருந்தாலும், அந்தக் காலத்தின் மேம்பட்ட நுட்பங்களை நினைவூட்டும் வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

History of Kailash Nath Temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->