முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம்.. கடைபிடிப்பது எப்படி?! - Seithipunal
Seithipunal


கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறை.!

விரதங்களில் கலியுக வரதனும், கண்கண்ட தெய்வமுமான கந்தனின் விரதமே கந்தசஷ்டி விரதம் ஆகும்.

கந்தனின் சிறப்பான விரத நாட்கள்

சுக்கிர வார விரதம்

கார்த்திகை விரதம்

கந்தசஷ்டி விரதம்

இதில் கந்தசஷ்டி விரதம் மிகச்சிறந்த விரதமாக சொல்லப்படுகின்றது.

கந்தசஷ்டி விழா ஐப்பசி மாத அமாவாசைக்கு பின் அதாவது, பிரதமை திதியில் இருந்து சஷ்டி திதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது கந்தசஷ்டி விரதம். கந்தனின் அருள் பெற, கந்தசஷ்டி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது? எனப் பார்ப்போம்.

கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை :

விரதத்திற்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.

கந்தசஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் நீராட வேண்டும்.

காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு வீட்டிலுள்ள சுவாமிக்கு பூக்களை வைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.

அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் நாளில், முருகனை மனதில் நினைத்துக் கொண்டு கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் போன்ற கவச நூல்களை பாட வேண்டும்.

திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரது அனுபூதி போன்ற நூல்களையும் ஓதலாம்.

இந்த விரதத்தை அன்ன ஆகாரமின்றி ஆறு நாட்களும் கடைபிடிக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் சஷ்டி அன்று முழு விரதம் இருந்து கந்தனை வழிபடலாம்.

பகலில் பழம், பால் மட்டுமே உண்ண வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம்.

காலை முதல் மாலை வரை குறைந்த அளவு பானம் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் அல்லது இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

கோவில்களில் தங்கி விரதம் இருக்க முடியாதவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதம் இருக்கலாம்.

இவ்வாறு ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் என்னும் நிகழ்ச்சியை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

கந்தசஷ்டி விரதத்தை அவரவர் உடல் நிலைகளுக்கு தகுந்தவாறு அனுசரிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To follow Kandha sashtti Viratham in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->