கடன் தொல்லை நீங்க வேண்டுமா? கடன் பிரச்சனைகளும்... தீர்வுகளும்...!  - Seithipunal
Seithipunal


இக்காலக்கட்டத்தில் நாம் கடன் வாங்குவது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.

பலர் வாங்கிய கடனை அதே அக்கறையுடன் திருப்பி செலுத்தி விடுகின்றனர். பலர் அதை திருப்பி அடைக்க முடியாமல் திணறுகின்றனர்.

கடன் வாங்குவதற்கு நேரம் மற்றும் காலம் என்பது மிகவும் முக்கியம். அதேபோல் கடனை திருப்பி அடைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியம். 

அந்த வகையில் கடன் பிரச்சனைகள் விரைவில் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம். 

கடன் பிரச்சனைகள் தீர சில பரிகாரங்கள் : 

தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.

வளர்பிறை சித்திரை நட்சத்திரம் வரும் நாளில், காமாட்சி அம்மனை பட்டுப்புடவை சாற்றி வழிபட்டால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.

காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் காலையில் குளித்த பின்பு உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வர பணத்திற்கு குறைவே இருக்காது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் சன்னிதியில் மாலை வேளைகளில் 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். 

கடன் வாங்கும்போது செய்யக்கூடாதவை : 

செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்க்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும்போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது அடைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்யக்கூடாது.

சந்திரன் பலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kadan thollai neenga parikarangal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->