காமாட்சி விளக்கு வீடுகளில் இருக்கலாமா.?!
kamatchi vilakku in house
பொதுவாக இந்துக்களின் வீட்டில் காமாட்சி விளக்கை நாம் காண முடியும். எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும்.., ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது.. என்கின்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா...?
காமாட்சி விளக்கு பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..
உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் கடும் தவம் புரிந்தாள். அப்போது சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுள் அடங்கியது.
அதனால்தான்., ஒருவர் காமாட்சி அம்மனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வாங்கியதற்கான பலனை பெறமுடியும் என்று சொல்கிறார்கள்.
இன்றைய காலத்தினை போல., பண்டைய காலத்தில் புகைப்படங்களை கொண்டு தெய்வத்தை வழிபடவில்லை.அதற்கு பதிலாக விளக்கேற்றி தான் தெய்வத்தை வழிபட்டனர்.

காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கினர். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளலும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைத்தது.
விளக்குகளிலேயே மிக புனிதமானதாக கருதப்படும் காமாட்சி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர்.
அனைத்து தெய்வங்களின் அருளை ஒன்றாக பெறுவதற்காகத்தான்., திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வளம் வருகின்றனர். புகுந்த வீட்டில் முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம்.
அதனோடு., குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குளம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
English Summary
kamatchi vilakku in house