'கருங்காலி மாலை' அணிவதால் என்ன பயன்? அணிய வேண்டிய ராசிக்காரர்கள்.!
karungali malai uses in tamil
ஆன்மீகத்தை பொருத்தவரை 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள குணங்களின் அடிப்படையில் ஒரு சில விஷயங்கள் நடைபெறும். அனைத்து ஆன்மீக காரியங்களிலும் அனைவரும் பங்கேற்க முடியாது.
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒரு சில விஷயங்கள் சிறந்ததாக இருக்கும். அது போல் கருங்காலி மாலையை அணிந்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீகம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கருங்காலி மாலை நன்மைகளை கொடுக்கிறது. மிகச் சிறப்பு வாய்ந்த கருங்காலி பெண்கள் அழிய அணியலாமா என கேள்வி உள்ளது.
பெண்கள் இந்த மாலையை தாராளமாக அணிந்து கொள்ளலாம். இந்த கருங்காலி மாலையை அணிவதால் ஒரு சில விஷயங்களை செய்யலாம்.ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது.

கருங்காலி மாலை முருகனுக்கு உகந்தது. ஒரு சில ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணிந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாக இருக்கும். குறிப்பாக கருங்காலி மாலையை மேஷ ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரர்கள், விருச்சகம் ராசிக்காரர்கள் அணிந்து கொள்ளலாம் கருங்காலி மாலை அணிய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்.
திருவாதிரை, அனுஷம், அஸ்வினி, மிருகசீரிஷம், விசாகம், கேட்டை, திருவோணம் போன்ற நட்சத்திரக்காரர்கள் அணிந்து கொள்ளலாம். கருங்காலி மாலையை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்றாலும் ஒரு சில விஷயங்கள் செய்யும் பொழுது கருங்காலி மாலையை நாம் அணியக்கூடாது.
உதாரணமாக இரவில் தூங்கும் பொழுது மாலையை அணிந்து கொண்டு தூங்க கூடாது. அசைவம் சாப்பிடும் பொழுது கருங்காலி மாலையை அணியக்கூடாது. துயரம் நிறைந்த வீட்டிற்குள் செல்லும்போது கருங்காலி மாலை அணியக்கூடாது.
English Summary
karungali malai uses in tamil