தாராள மனப்பான்மையும்... கடினமான உழைப்பையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...!!
kumbam rasi palan 2020
ராசி அதிபதியான சனிபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்க இந்த வருடம் துவங்கியது. புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் மேன்மையும், அனுபவங்களும் கிடைக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மற்றும் அறிமுகம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி சார்ந்த பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் அதிகரிக்கும். பொதுமக்களின் ஆதரவினால் அரசியல் துறையில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு விவசாய கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பயிர் வகைகளின் மூலம் நல்ல விளைச்சல்கள் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் நிமிர்த்தமான பயணங்களால் செல்வாக்கு மேம்படும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி பெறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை நன்முறையில் பயன்படுத்துவதன் மூலம் நன்மை உண்டாகும்.
பெண்களுக்கு :
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். விரும்பிய மணவாழ்க்கை சிலருக்கு அமையும். பழைய வீடு, மனை மற்றும் வாகனங்களை மாற்றம் செய்வதற்கான சூழல் உண்டாகும். சகோதர உறவுகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும். புத்திரர்களின் வகையில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சில நேரங்களில் பிறர் செய்த தவறுகளுக்காக அவப்பெயர்கள் நேரிடலாம். உத்தியோகத்தில் பணியிட மாற்றங்கள் மனம் விரும்பிய படியே கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் உத்தியோகம் சார்ந்த கோபத்தினை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வெளிநாடு தொடர்பான கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும்.
பரிகாரம் :
சனிக்கிழமைதோறும் ஐயப்பனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட மனத்தெளிவு உண்டாகும்.