காதல் திருமணம் கைகூட.. கடன் தொல்லை தீர.. செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


நீண்டகால கடன் தொல்லை, வறுமை, தம்பதிகளிடம் ஒற்றுமையின்மை, காதல் திருமணம் கைகூட, நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருத்தல் உள்ளிட்ட நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு வழிபாடு தான் இந்த 21 வார முருகன் வழிபாடு.

இந்த வழிபாட்டை துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே உங்கள் வீட்டில் நேர்மறையான விஷயங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம். நம்பிக்கையுடன் இறுதி வரை இதை கடைபிடிப்பவர்களுக்கு நிச்சயம் முருகனின் அருள் கிடைத்து வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

வீட்டில் வைத்து வழிபடக்கூடிய அளவில் ஒரு சிறிய வேலை கடைகளில் செவ்வாய் கிழமையில் வாங்கிக் கொள்வது நல்லது. இதை நாம் வாங்குவதை விட வயதில் மூத்தவர்களை வைத்து வாங்குவது நல்லது. 

அவர்களது ஆசீர்வாதத்துடன் இந்த வேலை பெற்றுக்கொண்டு நாம் வழிபாட்டை துவங்க வேண்டும். வாங்கிய வேலுக்கு ஒவ்வொரு செவ்வாயும் நீரால் சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைக்க வேண்டும்.

பின் ஒரு செம்பு மெட்டீரியலில் உள்ள சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து அதில் விபூதியை நிரப்பி கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் வேலை இந்த சோம்பில் உள்ள விபூதிக்கு நடுவில் சொருகி வைத்துக் கொள்ளலாம். 

சிறிது உதிரிப்பூக்களை எடுத்து ஓம் முருகா என்று கூறியவாறு பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 108 முறை இதை ஒவ்வொரு செவ்வாயும் நாம் அர்ச்சனை செய்தால் முருகனின் அருள் நமக்கு நிச்சயம் கிட்டும். 21 வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்பவர்களுக்கு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murugan vazhipadu For Love marriage and Long term Request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->