முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்... வீட்டில் இருந்தே எப்படி வழிபடலாம்.?! வைகாசி விசாக வழிபாடு...!! - Seithipunal
Seithipunal


முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாட்களில் முக்கியமானது வைகாசி விசாகத் திருநாள். முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.

விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும். வேலவன் அருளால் விரும்பியது நடக்கும். எனவே தான் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இந்த வருடம் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி விசாகம் வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமானை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறுகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். வெற்றிகள் வந்து சேரும். குறைகள் அகலும். கவலைகள் பறந்தோடும். கை நிறையப் பொருட்கள் குவியும்.

அபிஷேகமும், அற்புதப் பலன்களும் :

முருகப்பெருமானின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். 

பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பால் அபிஷேகம் செய்தால் பாவங்கள் தீரும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் சிந்தனைகள் வெற்றி பெறும். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் உருவாகும். நல்லெண்ணெய்யால் அபிஷேகம் செய்தால் நன்மை நடக்கும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும்.

மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். திருநீறால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்தால் அரசு வழி ஆதரவு கிடைக்கும். சொர்ணத்தால் அபிஷேகம் செய்தால் சுகங்களும், வாகன யோகமும் வந்து சேரும். பன்னீரால் அபிஷேகம் செய்தால் செல்வாக்கு உயரும். தேனால் அபிஷேகம் செய்தால் தித்திக்கும் சங்கீத ஞானம் கிடைக்கும்.

வைகாசி விசாகத்தன்று வீட்டில் வழிபடும் முறை :

வைகாசி விசாக நாளில் வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையில் முருகப்பெருமான் படத்தோடு விநாயகப்பெருமான் படத்தையும் இணைத்து வைத்து அதற்கு முன்னால் ஐந்துமுக விளக்கு ஏற்றி, ஐந்து விதமான பழங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யலாம்.

ஐந்துவிதமான பூக்களை மாலையாக தொடுத்து, முருகப்பெருமானுக்கு அணிவித்து அவருக்குப் பிடித்த மாம்பழத்தையும், கந்தரப்பத்தையும் வைத்து கவச பாராயணத்தை பாடி விரதமிருந்து வழிபட்டு வேண்டிய வரங்களை பெற்றிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muruganuku ugantha vaigasi visagam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->