எதிரிகளின் தொல்லையை போக்கும் பிராம்மி பூஜை.. இன்று நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு.! - Seithipunal
Seithipunal


சுபிட்சம் தரும் ஏழாம் நாளான பிராம்மி பூஜை:

அம்மன் வடிவம் : பிராம்மி.


பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள்.

பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல்.

நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள்.

தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.

வெண்ணிற ஆடை தரித்தவள்.

பிராம்மியை வழிபடுவதால் கல்வி வேள்விகளில் மேன்மை உண்டாகும்.

திருமால் இராமபிரானாக அவதாரம் எடுத்து அரசாண்ட போது லவண சுரன் என்ற அரக்கன் பலவிதமான இன்னல்களை தோற்றுவித்தான்.

தென்னாட்டில் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை.

 லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரானின் சகோதரனான சத்ருகன் போரிட சென்றார். இருப்பினும் சத்ருகனால் லவண சுரனை அழிக்க இயலவில்லை.

சத்ருகன் லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரான் வழிபட்ட துர்க்கை தேவியே லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

தங்களது குலகுருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி இராமர் துர்க்கை தேவியை வழிபட்டார். அதன் பின் சத்ருகன் லவண சுரனை அழித்து வெற்றி பெற்றார்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாழம்பூ

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : தும்பை

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மஞ்சள் நிற மலர்கள்.

அன்னையின் அலங்காரம் : சாம்பவி துர்க்கை அலங்காரம்

நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்

கோலம் : மலர் கொண்ட திட்டாணி கோலம் போட வேண்டும்.

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சுபிட்சம் உண்டாகும்.

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 8 வயது 

பாட வேண்டிய ராகம் : பிலஹரி 

பலன்கள் : வாழ்க்கையில் தெளிவு பெற்று முக்தி கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navarathiri 7th day poojai special 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->