9 படிகளில் கொலு வைத்து வழிபடுவது ஏன்.? நாளை கொலு வைக்க நல்ல நேரம்.. நவராத்திரி ஸ்பெஷல்..!
Navarathiri kolu history and Time details
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
நவராத்திரி விழா நாளை (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.
இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
நான்காம் படியில் - நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
ஐந்தாம் படியில் - ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.
கொலு வைக்க சிறந்த நேரம் :
காலை - 06.15 மணி முதல் 07.15 மணி வரை
நண்பகல் - 12.05 மணி முதல் 02.05 மணி வரை
மாலை - 06.05 மணி முதல் 09.05 மணி வரை.
English Summary
Navarathiri kolu history and Time details