சீமான் பாதுகாவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
seeman house guards bail denied
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி வளசரவாக்கம் காவல் துறையினரால் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாகவும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் ராணுவ வீரரும் சீமான் வீட்டின் பாதுகாவலருமான அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அமல்ராஜிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஜாமீன் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தும், மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
English Summary
seeman house guards bail denied