கடன் சுமையை குறைக்கும் ஒற்றை வரி மந்திரம்... இதை உடனே செய்து பயனடையுங்கள்...!
perumal manthiram for loan issue
பெருமாள் கோவிலில் அமரக்கூடாது? ஏன்?
நம் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும், வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?
அவரவர் ராசிப்படி தினமும் பெருமாளின் இந்த நாமத்தை உச்சரித்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நிச்சயம் தீரும். அது என்ன மந்திரம்? என்பது பற்றியும், பெருமாள் கோவில் வழிபாட்டில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகத்திற்கான பதிலையும் பார்க்கலாம் வாங்க.
பெருமாள் கோவிலில் அமரக்கூடாது? ஏன்?
பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமரக்கூடாது என்று சொல்கிறார்களே... அது உண்மையா? இப்படி சொல்வதற்கு என்ன காரணம்?
பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து, பின்பு தாயாரையும் தரிசனம் செய்துவிட்டு, மகாலட்சுமி தேவியிடம் வரங்களைக் கேட்டு விட்டு வீடு திரும்பும் போது, அந்த மகாலட்சுமி தாயார் நம்முடனே வந்து விடுவார்களாம்.
நம்முடன் நம் வீட்டிற்கு வரக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் எந்த விதத்திலும் தாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக பெருமாள் கோவிலில் அமரக்கூடாது.
ஆனால் கோவிலுக்கு நாம் செல்வதே மன அமைதியை தேடித்தான். அப்படி இருக்கும்போது இறைவனை வழிபட்டு விட்டு அவசர அவசரமாக கோவிலில் ஒரு நிமிடம் கூட அமராமல் செல்வது சரியாக இருக்காது.
ஸ்ரீதேவி நினைத்தால் நமக்கு எந்த வழியில் வேண்டுமென்றாலும் செல்வ வளத்தை கொடுக்க முடியும். நீங்கள் பெருமாள் கோவிலில் அமர்ந்து, உங்களுடைய மனதை அமைதிப்படுத்தி கொள்வதால் நிச்சயமாக உங்களுடன் மகாலட்சுமி தாயார் வரமாட்டேன் என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது.
உங்களுடைய ராசிப்படி உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைய நீங்கள் உச்சரிக்க வேண்டிய பெருமாளின் நாமம் எது?
மேஷம் : ஓம் கேசவாய நம
ரிஷபம் : ஓம் நாராயணாய நம
மிதுனம் : ஓம் மாதவாய நம
கடகம் : ஓம் கோவிந்தாய நம
சிம்மம் : ஓம் விஷ்ணுவே நம
கன்னி : ஓம் மதுசூதனா நம
துலாம் : ஓம் த்ரிவிக்ரமாய நம
விருச்சிகம் : ஓம் வாமனாய நம
தனுசு : ஓம் ஸ்ரீதராய நம
மகரம் : ஓம் ஹ்ருஷிகேசாய நம
கும்பம் : ஓம் பத்மநாபா நம
மீனம் : ஓம் தாமோதராய நம
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பெருமாளை மனதார நினைத்து பூஜை அறையில் உங்களுடைய ராசிக்கு உண்டான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எண்ணிக்கை கணக்கு கிடையாது. அது அவரவர் விருப்பம் தான்.
நிச்சயமாக உங்களுடைய பணப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த எம்பெருமான் கூடிய விரைவில் காட்டிக் கொடுப்பான்.
English Summary
perumal manthiram for loan issue