பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? கரும்பின் முக்கியத்துவம்..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?

தைத்திருநாளில் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புதிய பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?

வடக்கு திசையில் பொங்கினால் பணவரவு.

தெற்கு திசையில் பொங்கினால் செலவு.

கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

மேற்கு திசையில் பொங்கினால் மகிழ்ச்சி.

கரும்பு, வெல்லம், மஞ்சள்குழை.... நமக்கு அள்ளித் தரும் ஆரோக்கியப் பலன்கள்.!!

மஞ்சள்குழை :

பொங்கல் பானையை சுற்றி கட்டிவைக்கப்படும் மஞ்சள்குழை கிருமிநாசினியாக செயல்படும். பானையை சுற்றிக் கட்டிவைக்கப்படும் அந்த மஞ்சள்குழையில் உள்ள கிழங்கை கீறி எடுத்து மறுநாள் சிறியவர்களின் நெற்றியில் வைத்து ஆசி வழங்குவார்கள்.

மண்பானை :

மண்பானையில் சமைப்பதால் நுண் துளைகளின் வழியாக நீராவியும், காற்றும் உணவின் மீது சீராகவும், மெதுவாகவும் பரவும். இதனால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண்பானையில் சமைக்கும்போது கிருமிகள் அழிந்துவிடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல், அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும். உணவின் சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாக செரிமானமாகும்.

தலைவாழை இலை :

பொங்கல் பண்டிகையின்போது தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் வைத்து படைப்பார்கள். சூரியனுக்கு படைத்த பிறகு வாழை இலையில் பரிமாறப்படும் பொங்கலை சாப்பிடுவதால் இலையில் உள்ள இயற்கைச்சாறு உறிஞ்சப்பட்டு உடலில் சேரும். இது தோல்நோய் உருவாகாமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

வெல்லம் :

பொங்கல் பண்டிகைக்கே இனிமை சேர்ப்பது வெல்லம்தான். இது வாதம், செரிமான நோய்களை குணப்படுத்தும். வெல்லத்தை அளவுடன் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன.

கரும்பு :

பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. கரும்பில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கரும்பை கடித்து சாப்பிடுவதால் பற்கள் உறுதி பெறுகிறது.

கரும்பின் முக்கியத்துவம் :

பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமைமிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்தவித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பை சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal leak direction


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->