செவ்வாய் தோஷம் இருக்கா? அப்போ இந்தக் கடவுளை வழிபடுங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்கடவுள் முருக பெருமானுக்கு உகந்த கிழமை செவ்வாய். இந்தக் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால், தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும்.

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் உள்ளன. அதாவது, வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம். இந்த விரதங்களை மேற்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாயோடு நேரடி தொடர்புடையவன் முருகன். அதனால், செவ்வாய்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. 

செவ்வாய் கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகிலுள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்கு வந்ததும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். 

மீண்டும் மாலை ஆறு மணிக்கு முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pray murgan god for sevvai thosam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->