ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020: இந்த ராசிக்காரர்களின் செயல்பாடு மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்.!!
rahu ketu peyarchi 2020 in dhanusu rasi
தனுசு ராசி :
நடைமுறையில் ராகுவானவர் தனுசு ராசிக்கு ஏழாம் இடத்திலும், கேதுவானவர் லக்னத்திலும் இருக்கின்றனர். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் தனுசு ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் ஆறாமிடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது பனிரெண்டாம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.
முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும். அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு :
உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் பெண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், சில நபர்களால் புதிய அனுபவங்களும் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு வித்தியாசமான சில அணுகுமுறைகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சமவயது மாணவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு :
வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கிடைக்கும் லாபங்களை தகுந்த முறையில் சேமித்து வைத்துக்கொள்ளவும். புதிய நபர்களின் ஆலோசனைகளின் மூலம் முதலீடுகள் செய்யும் பொழுது துறை நிமிர்த்தமான நிபுணர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் நிமிர்த்தமான துறைகளில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் பயன்படுத்துதல் அதிகரிக்கும். எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் சார்ந்த கருத்து உரையாடல்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் தொடர்பான பணிகளில் பயிறு விளைச்சலுக்காக பயன்படுத்தும் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் காலதாமதம் ஏற்பட்டாலும் நிலையான லாபங்கள் உண்டாகும்.
வழக்கறிஞர்களுக்கு :
வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் புதுமையான விஷயங்கள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் பல பிரச்சனைகளை முடித்து வைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ஆன்மீக பெரியோர்களுக்கு :
ஆன்மீகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சில முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொது வாழ்க்கை பற்றிய புரிதலும், அது தொடர்பான சில காரியங்களும் சாதகமாக அமையும்.
ஆசிரியர்களுக்கு :
ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிராமல் இருப்பது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சில பணிகளில் அதிக முதலீடுகளை குறைத்து நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்கள் சக கலைஞர்களை பற்றிய கருத்துக்கள் தெரிவிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளை தாமரை மலர்களால் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர பணி நிமிர்த்தமான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
English Summary
rahu ketu peyarchi 2020 in dhanusu rasi