தபால் நிலையத்தில் ஆர்டர் செய்தால் போதும்..!! வீடு தேடி வரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..!! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என தனியாக அஞ்சல் நிலையம் "சபரிமலை 689713" என்ற எண்ணில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட தற்போதைய காலகட்டத்திலும் சபரிமலைக்கு ஏராளமான கடிதம், மணியாடர்கள் சபரிமலை ஐயப்பன் பெயரில் வந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று பக்தர்களுக்காக ஐயப்பன் கோயில் பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல் துறை மூலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் மூன்று வகையான பிரசாதங்கள் அனுப்பப்படுகிறது. ஒரு அரவணை கொண்ட பாக்கெட் 520 ரூபாய்க்கும், நான்கு அரவணை கொண்ட பாக்கெட் 960 ரூபாய்க்கும், பத்து அரவணை கொண்ட பாக்கெட் 1860 ரூபாய்க்கும் தபால் துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிரசாத பாக்கெட்டில் நெய், குங்குமம், மஞ்சள், விபூதி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் பிரசாதம் முன்பதிவு செய்து கொள்ளலாம். தபால் நிலையத்தில் முன்பதிவு செய்த ஏழாவது நாட்களுக்குள் பிரசாதம் விரைவு தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும். இந்த திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் 208 பிரசாத ஆர்டர்கள் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் தங்களுக்கு தேவையான பிரசாதத்தை அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappan Temple prasatham sales through Post Office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->