தினம் ஒரு திருத்தலம்... தேன் அபிஷேகம்... வெளியே வராத தேன்.!!
satchinadeswarar temple
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.
கோயில் எங்கு உள்ளது :
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்திலுள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும்.
இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளியே வராது.
கொடி மரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 46வது தேவாரத்தலம் ஆகும்.
வேறென்ன சிறப்பு :
கிழக்கு நோக்கிய கோபுரவாயில், முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது.
குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது.
திருவிழாக்கள் :
மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனைகள் :
திருமண வரம் வேண்டி இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
குழந்தைச் செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.