தசரா திருவிழா - அம்மனுக்கு சிறப்பு பூஜை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா நடைபெறும். அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 10.32 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் காப்பு கட்டினார்கள்.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, 2.30 மணி, மாலை 4.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. 

இதை முன்னிட்டு அன்று காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special poojai in kulasai muththaramman temple for dasara festival


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->