புத்திர பாக்கியம் அருளும்..தை மாத.. புத்ரதா ஏகாதசி..எல்லா வளமும் தரும் தை ஏகாதசி.!
Thai month Ekathasi special
மோட்சத்தை அளிக்கும் விரதங்களுள் ஒன்று தான் ஏகாதசி. ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அற்புதமான தினமாக இருக்கிறது.
ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.
பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை வணங்குபவர்கள் இருக்கிறார்கள்.
ஏகாதசி நாளில் விரதம் இருந்து ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். புத்தியில் தெளிவும், காரியத்தில் வெற்றியும் உண்டாகும்.
இயற்கை உரம் மற்றும் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறைகள்.
நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள்.
ஊடுபயிர் பற்றிய தெளிவான விவரங்கள்.
விதைகள் பற்றிய முழு விவரங்கள்.
மண்ணிற்கேற்ற பயிர் சாகுபடி.
பயிர்களின் இடைவெளி.
விவசாய பழமொழிகள் என உங்களுக்கு தெரியாத பல இயற்கை விவசாய டிரிக்ஸ் நித்ரா விவசாய வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போதே நித்ரா விவசாய வழிகாட்டி புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
புத்திரதா ஏகாதசி :
அந்த வகையில், தை மாத ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், பிப்ரவரி 12ஆம் தேதி ஏகாதசி ஆகும். தை மாதம் வளர்பிறை ஏகாதசி புத்திரதா ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பார்கள்.
இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்து, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்யலாம்.
புளியோதரை அல்லது தயிர்சாதம் பிரசாதமாக வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக, செம்மையுடன் வாழ்வீர்கள். மேலும் உங்களின் உறவினர்களும், நண்பர்களும் உங்களின் பிரார்த்தனையாலும், அன்னதானத்தாலும் இனிதே வாழ்வார்கள்.
தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவோம். சகல சம்பத்துக்களுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
English Summary
Thai month Ekathasi special