திந்த்ரிணீ கௌரி விரதம்... ரம்பா திருதியை... விரதம் இருப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


திந்த்ரிணீ கௌரி விரதம் :

நம் பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் விரதங்களில் திந்த்ரிணீ கௌரி விரதங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஸ்வர்ண கௌரி விரதம், பலால கௌரி விரதம் முதலான பல கௌரி விரதங்கள் பராசக்திக்கு உகந்த விரதங்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் பராசக்திக்கு உகந்ததாக சொல்லப்படும் திந்த்ரிணீ கௌரி விரதம் பற்றிப் பார்க்கலாம் வாங்க...

பார்வதி தேவியின் தவம் :

பார்வதி தேவி, எம்பெருமானை அடையும் பொருட்டுத் தவம் செய்து கொண்டிருந்தார். அத்தவகாலத்தில், 108 விதமான ரூபங்களில் ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமர்ந்து தவம் செய்தார். அவ்வாறு தவம் இருந்த தினங்களே கௌரி விரத தினங்களாக கொண்டாடப்படுகின்றன.

பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளை கொண்டு பூஜை செய்தால் விரதத்திற்கு இன்னும் பலன் கிடைக்கும்.

திந்த்ரிணீ கௌரி விரதம் என்பது பார்வதி தேவி மகிழ மரத்தடியில் தவம் செய்ததாகும். அதனை குறிக்கும் வகையில் இவ்வழிபாடு செய்யலாம்.

ரம்பா திருதியை :

தேவலோக நடனப் பெண்களுள் ஒருவர் ரம்பை தேவி. நடனத்திற்கு சிறந்த ரம்பை, ஒரு சமயம் இந்திரன் முன்னிலையில் நடனமாடிக் கொண்டு இருந்தார். வேகமாக ஆடும் போது, திடீரென்று, அவளது தலையில் இருந்த பிறைச்சந்திரனும் மற்ற அணிமணிகளும் கழன்று கீழே விழுந்தன. அதனால் ரம்பையின் அழகு பரிபோனது. 

இதற்குப் பிராயச்சித்தம் கௌரி தேவியைப் பூஜிப்பது மட்டுமே என்பதை அறிந்து, கார்த்திகை மாதம், அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை துவிதியை நன்னாளில், முறைப்படி பூஜை செய்து வழிபட்டார்.

ரம்பையின் பூஜையால் மனம் மகிழ்ந்த கௌரி தேவி, மறு நாள் திருதியை தினத்தன்று அதிகாலையில், மடியில் குமரனை ஏந்திய திருக்கோலத்தில் ரம்பைக்குத் தரிசனம் அளித்தார்.

ரம்பைக்கு இணையற்ற அழகையும், கலைகளில் வல்லமையையும், பொன்னாலான அணிமணிகளையும் அருளினார்.

கௌரி தேவி, அன்றைய தினத்தை ரம்பையின் பெயரால் 'ரம்பா திருதியை" தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அருளினார். அன்றைய தினம் கௌரி தேவியோடு ரம்பையையும் வழிபடுட்டால், ரம்பை பெற்ற அனைத்தையும் பெறுவர் என்பது ஐதீகம். 

விரதத்தின் போது என்ன செய்ய வேண்டும்...?

கௌரி விரத தினத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ பூஜை செய்யலாம். பூஜை நிறைவுறும் வரை முழு விரதம் இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து இந்தப் பூஜையைச் செய்யலாம்.

நீர் நிரம்பிய ஒரு கலசத்தில், மஞ்சளால் கௌரி தேவியின் உருவத்தை செய்து அலங்கரிக்க வேண்டும்.

மகிழ மரக்கிளைகளை அருகில் வைக்கலாம். பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். நைவேத்தியம் செய்ய இனிப்புப் பதார்த்தங்களே சிறந்தவை. குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் இனிப்புகள் சமர்ப்பிப்பது சிறந்தது. பூஜை செய்து முடித்தபின் பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும். 

கர்ம வினையால் இழந்தவற்றை அருளும் வல்லமை மிக்கது. இந்த விரதத்தை அனைவரும் பூஜித்து கௌரி தேவியின் அருளை பெறுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thinthrini gowri vratham 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->