திருகடுக்கை மூன்றீஸ்வரர் கோயிலில் அரிய வகை மரக்கன்றுகளுடன் புதிய நந்தவனம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி அருகே திருகடுக்கை மூன்றீஸ்வரர் கோயிலில் அரிய வகை மரக்கன்றுகளுடன் புதிய நந்தவனம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 கோயில்களில் புதிய நந்தவனம் அமைக்கும் திட்டத்தை முரலமைச்சர். மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்தார். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி திருகடுக்கை மூன்றீஸ்வரர் கோயிலில் மாதிரி நந்தவனம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு புதிய மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். அங்கு அரசு, வில்வம், புரசு, பன்னீர், செம்மரம், சந்தனம், மருது, மந்தாரை உள்ளிட்ட 40 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், ஒரு வட்டாரத்திற்கு 2 கோயில்கள் வீதம் கண்டறியப்பட்டு மாதிரி நந்தவனம் அமைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே நம் மண்ணிற்கு உகந்த மரங்களை கண்டறிந்திருப்பதாகவும், அவைகளை வளர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் சமூக ஆர்வலர்கள், ஒவ்வொரு இந்து கோயில்களிலும் ஒரு ஸ்தல மரம் இருந்து வந்தது அனைவருக்கும் அறிந்தது தான் என்றும், பணடைய காலங்களில் கோயில்களில் தெப்பக்குளம், நந்தவனம் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே தற்போதைய அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி அரிய மரக்கன்றுகளை கண்டறிந்து நட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUKADUKKAI MUNEESHWAR TEMPLE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->