"கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி" என்ற பழமொழியிக்கு அர்த்தம் இதுதானா? அந்த கோவில்.., ஆகா இது தெரியாமல் போய்டுச்சே.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோவில் இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த கோவிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள் மற்றும் 24-க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் உள்ளன. 

இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலை பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்கள் என அனைவரும் சிறப்பாக நிர்வகித்துள்ளனர். 

 இந்த கோவில் தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதற்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். 

"கோவில் ஐந்து வேலி, 
குளம் ஐந்து வேலி, 
செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி"
என்ற இந்த பழமொழி திருவாரூர் தியாகராஜன் கோவிலின் சிறப்பை உணர்த்துகிறது. இக்கோவிலில் திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக கிழக்கு கோபுரத்தின் உள்புறம் 1000 கற்றூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvarur thiyarajar temple


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->