ஒரே மாதத்தில் கோடிகளை காணிக்கையாக குவித்த திருப்பதி ஏழுமலையான்! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த வகையில் கடந்த ஜூலை மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை 29 நாட்களில் ரூ.131 கோடியே 76 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வரலாற்றுச் சாதனை என்று தேவஸ்தான அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்ட போது ரூ.6 கோடியே 18 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 81,287 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில், 34,436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்று ஒருநாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 83 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Esummalayan temple collected crores rupee


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->