தினம் ஒரு திருத்தலம்... திருமணக்கோலத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும்.!!
Tiruverkadu sivan temple
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு என்னும் ஊரில் அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.
இக்கோயிலில் சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அமர்ந்தவாரு காட்சி தருவது சிறப்பு.
மனித உருவத்தில் சிவபெருமான் திருமணக்கோல காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பாகும்.
இத்தலத்திற்கு 'விடந்தீண்டாப்பதி" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.
வேறென்ன சிறப்பு :
இத்தலத்து அம்பிகையையும், திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும் ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256வது தேவாரத்தலமாக உள்ளது.
இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம் ஆகும்.
இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
என்னென்ன திருவிழாக்கள் :
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனைகள் :
தோல் சார்ந்த நோய்களில் இருந்து குணமடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.