ஆரவாரத்துடன் தொடங்கிய அழகர் கோவிலின் ஆடித் தேரோட்டம்.!
today azhagar temple adi therottam
ஆரவாரத்துடன் தொடங்கிய அழகர் கோவிலின் ஆடித் தேரோட்டம்.!
வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது அழகர் கோவில். இங்குள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் இன்று காலை தொடங்கு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேரில் சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளியுள்ளனர். இந்தத் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி ஆரவாரத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரோட்டத்தை காண்பதற்கு அழகர் மலை அடிவாரத்தில் மக்கள் திரண்டனர்.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் தேரோட்டத்தைக் காண்பதற்கு ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
today azhagar temple adi therottam