திருமண காவலர்..பெரியாண்டவர்.. தட்ச சம்ஹாரம்..அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

 ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் சுமார் 95 கி.மீ தொலைவில் நாராயணவனம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

மூலஸ்தானத்தில் 7 அடி உயரத்தில் வீரபத்திரர், பத்ரகாளியுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் கிரீடத்தில் சந்திரனும், கங்காதேவியும் இருக்கின்றனர்.

இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவில் திருமணத்தை நடத்தி வைப்பார் என்பதால் இவரை 'திருமண காவலர்" என அழைக்கின்றனர்.

 கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை இக்கோயிலில் அமைந்துள்ளன. வீரபத்திரர் கோயில் என்றாலும், பெருமாளின் திருமணம் நடந்த தலம் என்பதால் தீர்த்தத்தை பிரசாதமாகத் தருகின்றனர்.

வேறென்ன சிறப்பு?

இங்குள்ள ஐயப்பனை 'பெரியாண்டவர்" என்று அழைக்கிறார்கள்.

 ஆடியில் 'தட்ச சம்ஹார" விழா நடக்கிறது. இவ்விழாவின் 5ம் நாளில் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அதன் பின்னர், வீரபத்திரர் சன்னதி முன்பு ஒரு வாழை மரத்தைக் கட்டி அதையே தட்சனாக கருதி வெட்டுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

தட்ச சம்ஹாரத்திற்கு மறுநாள் வீரபத்திரரின் உக்கிரம் தணிக்க, அவரது திருவாசியில் வெற்றிலையை செருகி பூஜை செய்கின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆடியில் தட்ச சம்ஹார விழா இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும், தம்பதியர் பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

சுவாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special kalyana veerabathrar kovil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->